தனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளவர்களில் இவரும் ஒருவர்.

தனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!
தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளவர்களில் இவரும் ஒருவர்.

இவரின் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் பட்டாஸ் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரின் கர்ணன் திரைப்படத்தின் அப்டேட்டும் வெளியாகவுள்ளது.

மேலும் இவரின் இரண்டாவது பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அவருடன் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லாக்டவுன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.

மேலும் இப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் தனுஷ் மற்றும் சாரா அலிகான் உள்ளனர்.