தளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்!

‘தளபதி 64’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன்

‘தளபதி 64’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் பட்டம் ரோல் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த இவர் உலகப் புகழ்பெற்ற இயக்குநரான மஜித் மஜிதி இயக்கியிருந்த பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்த இவர் தற்போது தளபதி 64 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாகவும், படத்தின் இயக்குநர் லோகஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்தும் தனது சமூக வலைதளபக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.