நயன்தாரா இத்தனை கண்டிஷன் போடுகின்றாரா?

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

Feb 25, 2020 - 12:41
 0
நயன்தாரா இத்தனை கண்டிஷன் போடுகின்றாரா?
நயன்தாரா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.

இதற்காக இவர் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நயன்தாரா மீண்டும் சோலோ ஹீரோயின் படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார்.

இவர் எப்போது படப்பிடிப்பிற்கு ஒரு குறிப்பிட்ட கலர் உள்ள காரில் தான் வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், அதே நேரத்தில் ‘படத்தின் ப்ரோமோஷன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் நான் ஒரு போதும் கலந்துக்கொள்ள மாட்டேன், என அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டு தான் படப்பிடிப்பிற்கே நயன்தாரா செல்வதாக’ பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor