முன்னணி நடிகரை காதலிக்கின்றாரா ராஷ்மிகா?

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ராஷ்மிகா. இவர் தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

முன்னணி நடிகரை காதலிக்கின்றாரா ராஷ்மிகா?
ராஷ்மிகா

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ராஷ்மிகா. இவர் தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க, இவர்கள் இரண்டு பேரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதை தொடர்ந்து இவர்கள் டியர் காம்ரேட் என்ற படத்திலும் இணைந்து நடிக்க, இருவரும் காதலிக்கின்றார்கள் என்று ஒரு வதந்தி பரவ ஆரம்பித்தது.

சில நாட்களில் அவர்களே இதை கண்டுக்கொள்ளாமல் இருக்க, வதந்தியும் அப்படியே அமுங்கியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட, இன்னும் இவர்கள் காதலித்து தான் வருகிறார்களா என்று தெலுங்கு மீடியாக்கள் எழுதி தள்ள ஆரம்பித்துவிட்டன்ர், இனி அவர்களே இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே உண்டு.