தர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது ஷீட்டிங் படங்கள் இணையத்தில் வெளிவந்தது. கடும் பாதுகாப்பையும் மீறி படங்கள் வெளி வந்தது படக்குழுவை அதிர்ச்சியடயவைத்தது. அப்போதிலிருந்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் இப்போது தர்பார் படத்தின் ஷீட்டிங் படங்கள் லீக்காகியுள்ளன.
இப்போட்டோக்களில் ரஜினி மும்பை போலீஸ் உடை அணிந்து நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ரஜினியின் போலீஸ் லுக் வெளியானதில் படக்குழு கடும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது. எப்படி இப்படங்கள் வெளிவந்தது என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.