வெறித்தனம் பாடல் பதிவு என்னுடைய கனவு நாள்! பிகில் பட பிரபலம்

தளபதி ரசிகர்களின் நீண்டநாள் வற்புறுத்தலுக்கிணங்க சமீபத்தில் இப்படத்தின் வெறித்தனம் என்ற பாடல் ஒன்றை விஜய் பாடவுள்ளார் என்ற அப்டேட் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் வரிகளை கொடுத்துள்ளார்.

வெறித்தனம் பாடல் பதிவு என்னுடைய கனவு நாள்! பிகில் பட பிரபலம்
பிகில்

தளபதி ரசிகர்களின் நீண்டநாள் வற்புறுத்தலுக்கிணங்க சமீபத்தில் இப்படத்தின் வெறித்தனம் என்ற பாடல் ஒன்றை விஜய் பாடவுள்ளார் என்ற அப்டேட் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் வரிகளை கொடுத்துள்ளார்.

வெறித்தனம் பாடல் தொடர்பாக படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில் விஜய் கைகட்டி நிற்க அவர் அருகே அமர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேக் இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்ன அண்ணனே நின்றிருக்கிறார் நீங்க உட்கார்ந்து இருக்கீங்க என்று பாடலாசிரியர் விவேக்கிடம் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பாடலாசிரியர் விவேக், நான் விஜய் சாரை உட்கார சொன்னேன். ஆனால் அவர் தனது எளிமையால் அதை மறுத்துவிட்டார். ஏனெனில் நான் உயரம் அதிகம்; கேமிரா கோணங்கள் மாற்ற வேண்டியிருக்கும் என்பதால் தான்.

ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இருக்கையில் அமர்ந்திருக்க, விஜய் அவரது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது என்னுடைய கனவுநாள் என்று கூறியுள்ளார்.