குற்றப்பரம்பரை படத்தின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதுநடுவில் பாரதிராஜா அப்படத்திற்கு பூஜையும் போடப்பட்டு படத்தை எடுக்க அனைத்தையும் தயார் செய்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று இயக்குனர் பாலா பத்திரிக்கையாளர்களை சந்தித்து இப்பிரச்சனை குறித்த விளக்கங்களையும், பாரதிராஜாவிற்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

தற்போது இதுகுறித்து பாரதிராஜாவிடம் கேட்டபோது, நான் இப்பிரச்சினையைப் பற்றி பேச விரும்பவில்லை. என் முழு கவனமும் படத்தை சிறப்பாக எடுப்பதிலேயே உள்ளது என்று முடித்துக் கொண்டுள்ளார்.